பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) காலை 6 மணி நிலவரப்படி, நாட்டின் மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிளந்தானில் 80 பேராக அதிகரித்துள்ளது, இது நள்ளிரவு 70 பேராக இருந்தது.

அதே நேரத்தில் பகாங்கில், வெள்ளம் காரணமாக வாழ்விடங்களில் இருந்து வெளியேறியவர்கள் மாரான் மற்றும் தெமெர்லோவில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக இருந்து தற்போது 29 பேராக உயர்ந்துள்ளது என்று, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கிளந்தானின் பாசீர் மாஸில் 26 பேரும், ஜோகூரின் சிகாமாட்டில் 24 பேரும் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here