இந்த ஆண்டு பேராக்கில் பிறக்கும் 3,000 குழந்தைகளுக்கு RM600,000 ஒதுக்கீடு -யயாசான் பேராக்

ஈப்போ:

பேராக் மாநில அரசின் யயாசான் பேராக் அறக்கட்டளை அமைப்பு, பேராக் குழந்தைகள் கல்வி சேமிப்பு நிதி (TASPEN) மூலம் இந்த ஆண்டு பிறக்கும் சுமார் 3,000 குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் RM600,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

பேராக்கில் பிறக்கும் குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக மாநில அரசின் முன்முயற்சியாக இந்த நன்கொடை நிதி வழங்கப்படும் என்று யாயாசான் பேராக் தெரிவித்துள்ளது.

“ஒரு நபருக்கு RM200 பங்களிப்பு தேசிய கல்வி சேமிப்பு திட்டம் (SSPN) பிரதம கணக்கில் கல்வி சேமிப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது ‘Tuisyen Cikgu Saarani (TCS)’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்,” என்று அவ் அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு RM200 SSPN பிரைம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இது ஒரு குறிப்பிட்ட வருமானம் மற்றும் PTPTN வழங்கும் நன்மைகளுடன் இணைந்த ஒரு நீண்ட கால கல்வி சேமிப்புக் கணக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“யாயாசன் பேராக் அறக்கட்டளை அமைப்பு மூலம், இந்த குழந்தைகள் 18 வயதை அடையும் வரை, RM200 ஆரம்ப சேமிப்பு அவ்வப்போது அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈப்போவிலுள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் (HRPB) மருத்துவமனையுடன் இணைந்து, நேற்று புத்தாண்டு தினத்தில் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு TASPEN வவுச்சர்களை வழங்கும் ஒரு விழாவை யயாசான் பேராக் நடத்தியது.

யயாசான் பேராக்கின் தலைவரான மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், இன்று இங்குள்ள HRPB இன் மகப்பேறு வார்டில் RM200 TASPEN வவுச்சர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here