ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான போலி காதலியிடம் RM29,000 இழந்த ஆடவர்

குவாந்தான்:

மூக ஊடகங்கள் மூலம் தனக்கு ஒரு உண்மையான அன்பு கிடைத்து என எண்ணிய ஆடவருக்கு, இறுதியில் RM29,000 இழப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.

ஃபூங் (42) என்று அழைக்கப்படும் பாதிக்கப்பட்டவர், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஃபேஸ்புக் மூலம் பெண் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும், பின்னர், அவர் அடிக்கடி வாட்ஸ்அப் மூலம் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டார் என்றும் கூறினார்.

அவரின் காதலியான சந்தேக நபர் லாபகரமான வருமானத்தை பெறலாம் எனக்கூறி, அவரை ஒரு வணிகத்தில் சேர அழைத்தார்.

“அதில் நான் கடிகாரங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டியிருந்தது, பின்னர் கமிஷனைப் பெற அவற்றை விற்க வேண்டியிருந்தது” என்றும், இதற்காக கடந்த “டிசம்பர் 13 முதல் 18 வரை வெவ்வேறு கணக்குகளுக்கு RM29,000 மதிப்புள்ள மூன்று பரிவர்த்தனைகள் செய்தேன், ஆனால் நான் பெற வேண்டிய லாபத்தை திரும்பப் பெற முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

தான் அந்தப் பெண்ணைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை, பின்னர் டிசம்பர் 24 அன்று குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தான் புகாரளித்ததாகவும் ஃபூங் கூறினார்.

நேற்று இங்கு செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் சான் சுன் குவாங் மற்றும் மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி டேனியல் கூ ஆகியோர் கலந்து கொண்ட ஒரு ஊடக மாநாட்டில் பாதிக்கப்பட்ட ஃபூங் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here