மானிய ஒதுக்கீட்டில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க மலேசியர்கள் தங்கள் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்

அரசாங்கச் செலவுகள் மற்றும் மானியங்கள் ஒதுக்கீடுகளில் கசிவுகளை நிவர்த்தி செய்ய மலேசியர்கள் தேசிய மத்திய தரவுத்தள அமைப்பில் (பாடு) தங்கள் தகவல்களைப் பதிவு செய்து புதுப்பிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். முகநூல் பதிவில், மானியங்கள் மற்றும் பிற வகையான அரசாங்க உதவிகளிலிருந்து தகுதியான நபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பாடு நிறுவப்பட்டது என்று கூறினார்.

தேவைப்படுபவர்களுக்கு உதவ அரசாங்கம் RM22பில்லியன் செலவழித்த போதிலும், பல்வேறு கசிவுகள் காரணமாக இந்த நிதி உத்தேசிக்கப்பட்ட குழுக்களுக்கு சென்றடையவில்லை என்றார். வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் RM80 பில்லியன் மானியம் கூட, 3.5 மில்லியன் வெளிநாட்டினர் மற்றும் பெரும் பணக்காரர்களால் அனுபவிக்கப்படுகிறது. RM22பில்லியன் செலவு மற்றும் RM80பில்லியன் மானியங்கள் வசதி குறைந்தவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்காக இருந்தால், இந்த நாட்டில் தீவிர வறுமை நீடிக்கக்கூடாது.

எனவே, அரசாங்க நிதி கசிவைத் தடுக்கவும், ஏழைகளின் உரிமைகளை பணக்காரர்கள் மற்றும் திறமையானவர்கள் முந்துவதைத் தடுக்கவும் நான் உறுதிபூண்டுள்ளேன என்று அவர் மலேசியர்களை அவர்களின் பாடு கணக்குகளை பதிவு செய்ய ஊக்குவித்தார். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தகவல்களை படுவில் புதுப்பிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார். மலேசியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தங்கள் தகவலைப் புதுப்பித்து சரிபார்க்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் நபர்கள், பாடுவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்ட மானியங்களைப் பெறுவதில் இருந்து விலக்கப்படும் அபாயம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here