கார் விற்பனை நிலையத்தில் தீ; 7 சொகுசு கார்கள் சேதம்

கூச்சிங்:

பிண்டாவாவில் உள்ள கார் விற்பனை நிலையத்தின் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு சொகுசு கார்கள் இன்று தீயில் எரிந்து நாசமாகின.

இதில் Volkswagen Peter, Mercedes CLS, BMW 7 Siries மற்றும் Audi Q7 ஆகிய நான்கு கார்கள் முற்றாக சேதமடைந்தன.

மேலும் மூன்று கார்கள், அதாவது ஒரு Mercedes E20, ஒரு Mercedes B180 மற்றும் ஒரு BMW 7 சீரிஸ் ஆகியவை 50 விழுக்காடு எரிந்தன, அதே நேரத்தில் ஒரு Volkswagen கார் பத்திரமாக மீட்கப்பட்டது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் மாநில செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இன்று அதிகாலை 4.50 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே தபுவான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மொத்தம் 13 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

“அங்கு வந்து பார்த்தபோது, ​​கடையின் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தீ பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

“கேரேஜில் மொத்தம் எட்டு கார்கள் இருந்தன, அவற்றில் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது, ஆனால் தீ கட்டிடத்தின் கட்டமைப்பில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here