எம்ஜிஆர் சிலம்ப கழகத்தின் 7 மாணவர்களுக்கு கறுப்புப் பட்டை

கோலாலம்பூர், ஜன 9-
முழுமையாகத் தேர்ச்சி பெற்ற ஏழு மாணவர்களுக்கு மலேசிய எம்ஜிஆர் சிலம்பக் கழகம் கறுப்புப் பட்டை அணிவித்து கௌரவித்துள்ளது. சிவசங்கர் சுகுமாரன், யுகன் சரவணன், ஸ்ரீ சன்மித்திரன் தேவராஜா, கமலேஸ்வரி முருகன், லிங்கேஸ் மாரிமுத்து, கங்காஸ்ரீ மாரிமுத்து, விஸ்வேஸ்வரன் பன்னீர் செல்வம் ஆகியோர் கறுப்புப் பட்டைப் பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்கள் பேராக், தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவரைச் சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகத்தின் மகாருகு டி.எஸ்.மோகனராமன், எஸ்.சசிதரன் துணை மாஸ்டர் எஸ். குமரவேல் ஆகியோரிடம் முழுமையாகச் சிலம்பக் கலையைக் கற்று இவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here