ஜோகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,397 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர்:

ஜோகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை காலையுடன் ஒப்பிடும்போது சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.

இரவு 8 மணி நிலவரப்படி, இரு மாநிலங்களிலும் உள்ள 73 நிவாரண மையங்களில் மொத்தம் 8,397 பேர் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, ஜோகூரில் மொத்தம் 7,947 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கி மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 நிவாரண மையங்களில் 4,705 பேர் தங்கியுள்ளனர், அதனைத்தொடர்ந்து ஜோகூர் பாருவிலுள்ள 11 நிவாரண மையங்களில் 1,753 பேரும், குளுவாங்கிலுள்ள 9 நிவாரண மையங்களில் 1,306 பேரும், கூலாயிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 86 பேரும், சிகாமாட்டிலுள்ள4 நிவாரண மையங்களில் 75 பேரும், பொந்தியானிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 22 பெரும் என மொத்தம் 4,947 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பகாங்கிலுள்ள மூன்று மாவட்டங்களில் இயங்கிவரும் 21 நிவாரண மையங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 ஆகக் குறைந்துள்ளது.

பெக்கானில் செயற்பாட்டிலுள்ள 9 நிவாரண மையங்களில் 377 பேரும், மாரானிலுள்ள 1 நிவாரண மையத்தில் 4 பேரும் , ரொம்பினிலுள்ள 11 நிவாரண மையங்களில் 69 பேரும் என மொத்தம் 450 பேர் தங்கியுள்ளனர்.

மேலும் சரவாக்கின் கூச்சிங்கில், தீ விபத்தில் தமது வீடுகளை இழந்துள்ள 38 பேர் தங்குவதற்கு ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here