பினாங்கு நீர் வெட்டு; நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை, மீறினால் RM50,000 அபராதம்

பட்டர்வொர்த்:

பினாங்கில் நாளை (ஜனவரி 10) முதல் 4 நாட்களுக்கு (ஜனவரி 14) வரை தண்ணீர் விநியோகம் தடைபடுவதைத் தொடர்ந்து, குறித்த 4 நாட்களுக்கு அங்குள்ள நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தைத் தேர்வுசெய்தால், முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்துக்கொண்டாலோ அல்லது வருடாந்தர விடுப்பில் செல்லுமாறு கட்டாயப்படுத்தினாலோ, அந்நிறுவனத்திற்கு எதிராக வேலைவாய்ப்புச் சட்டம் 1955 இன் கீழ் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இது தொடர்பில் முதலாளிகளும் ஊழியர்களும் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தேவைப்பட்டால் தொழிலாளர் துறையை தொடர்பு கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.

நேற்று (ஜனவரி 8) பினாங்கில் உள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (Socso) அலுவலகத்திற்குச் சென்ற அவர், இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here