சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில் இந்திய சுற்றுலா பயணி பலி; இருவர் படுகாயம்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM198 இல் பேருந்து தீ பிடித்து எரிந்ததில்  இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இறந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். சனிக்கிழமை (ஜன 13) அதிகாலை 3.50 மணியளவில் எரியும் பேருந்தில் சிக்கி இறந்தவர் யாஃபரா தாஜ் ஃபக்ருதீன் ஹுசைனி (17) என அலோர் காஜா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அர்ஷத் அபு தெரிவித்தார்.

சுற்றுலாப் பேருந்து 28 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்தது என்றார். பலத்த காயமடைந்தவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு, களக்காட்டைச் சேர்ந்த பீர் முகமது கண்ணுதீன் 69 மற்றும் சென்னையைச் சேர்ந்த அனிசா பேகம் ஃபக்ருதீன் ஹுசைனி 45, ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும், 21 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹசிக் ஹில்மி ரஸாலி காயமின்றி உயிர் தப்பினார் என்றும் அவர் கூறினார். இறந்தவரும் காயமடைந்த பயணிகளும் குடும்ப உறுப்பினர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பிடிக்கும் முன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று  அர்ஷாத் கூறினார். காயமடைந்தவர்கள் அலோர் காஜா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here