ஜோகூரில் வெள்ள நிலைமை மேம்படுகிறது; இன்னமும் 1,141 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

ஜோகூர் பாரு:

ன்று காலை 8 மணி நிலவரப்படி, 326 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,141பேர் இன்னும் அங்குள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், மாநிலத்தில் வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதால், நிவாரண மையங்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதாவது நேற்று மாலை 8 மணி நிலவரப்படி 14 பிபிஎஸ்ஸில் பாதிக்கப்பட்ட 1,150 பேருடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது என்று மாநில செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர். அஸ்மி ரோஹானி கூறினார்.

மெர்சிங் மாவட்டத்தில் இயங்கிவரும் நான்கு நிவாரண மையங்களில் 185 குடும்பங்களை சேர்ந்த 611 பேர் இன்னமும் தங்கியுள்ளனர், அதைத் தொடர்ந்து கோத்தா திங்கியிலுள்ள நான்கு நிவாரண மையங்களில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குளுவாங்கிலுள்ள இரண்டு நிவாரண மையங்களில் 42 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 155 பேர் தங்கியுள்ளனர்; அத்தோடு சிகாமாட்டில் இயங்கிவரும் இரண்டு நிவாரண மையங்களில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேரும்; பத்து பகாட்டில் இயங்கிவரும் ஒரு நிவாரண மையத்தில் 32 பேரும் தங்கியுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here