குவா மூசாங்:
பத்து 6 கிராமத்தில் இருந்து நகருக்கு வெளியேறும் பகுதியின் பிரதான சாலையில் உள்ள இரும்பு பாலம், கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிராமத்தில் உள்ள 60 மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கிராமத்திலிருந்து வெளியேறும் ஒரே ஒரு பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
19 வயதான முஹமட் அலிஃப் நசுவான் அஸியான் கூறுகையில், மழைக்காலங்களில் அடிக்கடி பாலம் வெள்ளத்தில் மூழ்குவதால், தாம் வேலைக்கு வெளியே செல்ல முடியாமல் போவதாகவும், இதனால் பலரது வருமானம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.