4 மீட்டர் நீளமும் 100 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு பிடிப்பட்டது

பாசீர் மாஸ்: கிளந்தான் குடிமைத் தற்காப்புப் படை இன்று 100 கிலோ எடையுள்ள 4 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்தது. பாசீர் மாஸ் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி கேப்டன் முகமட் ஆரிப் முகமது ஜைன், கம்போங் குபாங் செனோக்கில் மலைப்பாம்பு பிடிபட்டதாக தெரிவித்தார்.

கம்போங் குபாங் செனோக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு கிராமவாசி ஒருவரிடமிருந்து காலை 8.15 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்ததை அடுத்து ஒரு குழு அனுப்பப்பட்டது. குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஒரு கோழிக் கூடுக்குள் ஒரு ராட்சத மலைப்பாம்பு இருப்பதைக் கண்டோம். நாங்கள் சுமார் 20 நிமிடங்கள் பாம்பைக் கூட்டில் இருந்து வெளியே இழுத்தோம் என்று அவர் கூறினார்.

மலைப்பாம்பு பின்னர் ஒரு லோரியை பயன்படுத்தி ஏபிஎம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார். பிடிக்கப்பட்ட  மலைப்பாம்பு விரைவில் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here