இணையத்தில் கஞ்சா விற்பனை ; ஷா ஆலாமில் நால்வர் கைது

ஷா ஆலாம்:

ணையம் மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக நம்பப்படும் நால்வரை ஷா ஆலாமில் போலீசார் கைது செய்ததுடன், 6.5 கிலோ மதிப்புள்ள போதைப்பொருட்ளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணியளவில் க்ளென்மேரி பகுதியில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதில், 31 முதல் 32 வயதுக்குட்பட்ட நான்கு பேரை கைது செய்ததாக ஷா ஆலம் ஓசிபிடி துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

“குறைந்தபட்சம் RM20,243 மதிப்புள்ள 6.53 கிலோ கஞ்சாவை நாங்கள் கைப்பற்றினோம்” என்று அவர் இன்று (ஜன. 18) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

டெலிகிராம் மூலம் குறித்த கும்பல் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டது என்று சோதனைகளில் தெரியவந்தது என்று அவர் கூறினார்.

“வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற்றவுடன், அவர்கள் கூரியர் சேவை மூலம் போதை மருந்துகளை அனுப்புவார்கள்.

இந்தக்கும்பல் ‘Basir Bertengung’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்திருப்பதும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும் இந்தக்கும்பலிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டு இருப்பதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

“மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக நான்கு சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here