52 வயதான கங்கேஸ்வரன் சிவகுருநாதன் மிகவும் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவராவார். இவரின் தந்தை இந்தியர், தாயார் சீனர். மூன்று பிள்ளைகளுள் மூத்தவரான கங்கேஸ்வரன் தனது 13ஆவது வயதில் தன் தந்தையை இழந்தார்.
என் தந்தை தமது 44ஆவது வயதில் திடீரென காலமானார். அதன் பின்னர் என் தாயார் தனிமையில் எங்களைப் பராமரிக்க வேண்டி இருந்தது. அவர் இதற்கு முன் வேலை ஏதும் செய்ததில்லை.
இருப்பினும் எங்கள் பள்ளிக் காலம் முடியும் வரையில் அவர் சிறார் பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வந்தார் என்று கங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
சிறு வயது முதல் கங்கேஸ்வரன் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை யைக் கொண்டவராவார். வளர்ந்த பின்னும் கவுன்சிலிங் துறையில் கல்வி கற்று தமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முற்பட் டார். இருப்பினும் அது நிறைவேறவில்லை. அந்தக் காலகட்டத்தில் கவுன்சிலிங் என்பது ஒரு துறை கிடையாது என என்னைச் சுற்றியிருந்த பலரும் நினைத்திருந்தனர். மேலும் என் உடன்பிறப்புகளுள் மூத்தவர் மட்டுமன்றி ஒரே ஆண் பிள்ளை என்பதால் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இதனால் பொறியியல் சார்ந்த துறையில் கல்வி கற்றேன் என்றார் அவர்.

1995ஆம் ஆண்டு கங்கேஸ்வரன் Physics and Microelectronics துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு சவால்மிக்க வர்த்தகத் துறையில் கால்பதித்த அவர், சொந்தமாக வியாபாரம் தொடங்கி நான் வர்த்தகத்தில் வெற்றி பெற்றதால் அது எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு 48 வயதாகும் சமயத்தில்தான் பெரும்பாலான நேரங்களில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இது தவிர ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதையும் உணர்ந்தேன்.
எனவே எனது வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடத் தொடங்கினேன். அதற்கான பதிலைத் தேடும் சமயத்தில்தான் ஆன்மீகத்தை நாடினேன்.
அதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டேன். அப்போதுதான் எனது ஆரம்பக்கட்ட ஆசையான கவுன்சிலிங் துறையில் ஈடுபடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்தேன் என கங்கேஸ்வரன் விவரித்தார்.
வயது மூத்த மாணவர்களின் சராசரி நடவடிக்கையாக கங்கேஸ்வரன் தனக்கு ஏற்ற பல்கலைக்கழகத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக வேலை செய்து கொண்டே கல்வி பயில ஏற்ற உயர்கல்விக்கூடம் அவருக்குத் தேவைப்பட்டது.
அதன் அடிப்படையில் கங்கேஸ்வரன் ஓயுஎம் (மலேசிய பொது பல்கலைக்கழகம்) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் 55 பாடத்திட்டங்கள் முழுமையாக ஆன்லைன் வாயிலாகப் போதிக்கப் படுகின்றன. அது மட்டுமன்றி வேலைசெய்பவர்களுக்கு ஏற்றவாறு உயர்கல்விப் பாடத் திட்டங்களை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இந்நிலையில் எனது ஓய்வு நேரங்களை நான் வகுப்புகளுக்குச் செலவிட வேண்டி இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்ட பிறகு முன்பைப்போல் என்னால் நூலகங்களில் புத்தகங்களில் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை.
அது மட்டுமன்றி எனது விரிவுரையாளர்கள், சக மாணவர்களுடன்கூட பேச முடியவில்லை. ஆனாலும் எனக்கு நாளே சுமையை உயர்த்திக் கொள்ளவில்லை. முறையான நேர மேலாண்மையைக் கடைப்பிடித்து மிகவும் ஏற்புடைய நிலையில் அதனைச் செயல்படுத்தினேன் எனவும் கங்கேஸ்வரன் கூறினார்.
இச்சூழலில் 2022ஆம் ஆண்டில் புதிய சவாலை எதிர்கொள்ள கங்கேஸ்வரனுக்கு அவர் கற்கும் கல்வி உத்வேகத்தைக் கொடுத்தது. தமது வர்த்தகக் கூட்டமைப்பாளருடன் அவர் ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தொடங்க வேண்டி இருந்தது. ஆனாலும் அந்தச் சவாலை அவர் சரிவர எதிர்கொண்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஓயுஎம் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழாவில் 4.0சிஜிபிஏ மதிப்பெண் களுடன் கங்கேஸ்வரன் பட்டம் பெற்றார்.
நமது கனவுகளுக்கும் தொழில் பயணங்களுக்கும் கல்வி மிகவும் முக்கியம் என நான் நம்புகிறேன். நாம் நம்மைக் கவனித்துக் கொள்ள தொடங்கி விட்டால் மற்றவர்களுக்கும் உதவலாம் என்றும் கங்கேஸ்வரன் மகிழ்ச்சிபொங்க தெரிவித் தார். அவரைப்போல் பல்வேறு கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் இருப்பவர்களுக்கு சரியான தேர்வாக ஒயுஎம் பல்கலைக்கழகம் அமைகின்றது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள், பயிற்சிகள், தேர்வுகள் ஆன்லைனில் முன்னெடுக்கப்பட்டாலும் நாடு தழுவிய அளவில் 35 கற்பித்தல் மையங்களும் உள்ளன.
குறிப்பாக ஓயுஎம் பல்கலைக்கழகமானது வேலை செய்பவர்கள், வர்த்தகர்கள், விளை யாட்டாளர்கள், கைதிகள் என அனைத்துத் தரப்பினரும் உயர்கல்வி கற்பதற்கான உன்னத வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின் றது.
தோற்றுவிக்கப்பட்ட 20 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம் 100,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி யுள்ளது.
மேல் விவரங்களுக்கு: 03-78012000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புவதோடு www.oum.edu.my என்ற அகப்பக்கத்தை யும் வலம் வரலாம்.










