தாமான் தாசிக் தித்திவாங்சாவில் சட்டவிரோத வர்த்தகமா? DBKL கண்காணிப்பு

கோலாலம்பூர்:

தாமான் தாசிக் தித்திவாங்சா பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளை மிக நெருக்கமாக கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) கண்காணிக்கும்.

தாமான் தாசிக் தித்திவாங்சா பகுதியில் பல வியாபாரிகள் வணிக உரிமம் இல்லாமல் செயல்படுவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தமது துறையினர் புகார்களைப் பெற்றுள்ளதாக பிரதமர் துறை (கூட்டாட்சி பிரதேசங்கள்) அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா கூறினார்.

இந்த சட்டவிரோத வணிகம் மூலம் ஜாலான் குவாந்தான், ஜாலான் தெமெர்லோ மற்றும் ஜாலான் தெம்பேலிங் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.

எனவே இந்த பிரச்சினையை தீர்க்க DBKL உடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கியபோது, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here