டைவிங் பயிற்சியின் போது நீரில் மூழ்கி பெண் மரணம்

அலோர் ஸ்டார்:

நேற்று பூலாவ் பயார் கடலில் டைவிங் பயிற்சியின் போது, நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட 43 வயதான அப்பெண்மணி சிலாங்கூரில் உள்ள காஜாங்கை முகவரியாக கொண்டுள்ளார் என கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், சுல்தானா பஹியா மருத்துவமனை (HSB) ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் மரணம் குறித்து லங்கார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் என்றார்.

“பாதிக்கப்பட்டவர் கோலா கெடா ஜெட்டியில் இருந்து ஹெச்எஸ்பிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here