ஷா ஆலாம்:
ஷா ஆலாம், செக்ஷன் 28-இல் இன்று இரு ஆடவர்கள் மீது மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த வாகனம் ஒன்றின் ‘டேஷ்கேம்’ (Dashcam) கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது:
காரில் வந்திறங்கிய மர்மக் கும்பல் ஒன்று, திடீரெனச் சாலையில் விழுந்து கிடந்த நபர் ஒருவரை நோக்கி விரைந்து சென்று அவரை கத்தியால் வெட்டியுள்ளது. அத்துடன் நில்லாமல், அங்கிருந்த மற்றொரு ஆடவர் மீதும் அக்கூட்டம் கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பியோடியது.
தாக்கப்பட்ட இரு நபர்களின் தற்போதைய உடல்நிலை மற்றும் இத்தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாகப் போலிசாரின் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் மேலதிக உறுதிப்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
























