கோலாலம்பூர்:
முறையான உரிமம் இல்லாது அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 26 இலட்சம் மதிப்புள்ள உறைந்த இறைச்சிகளை மலேசிய சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அவற்றில் 164,800 கிலோகிராம் எடைகொண்ட பன்றி மற்றும் மாட்டிறைச்சிகள் அடங்கும் என்று கூட்டரசுப் பிரதேச சுங்கத்துறை துணை தலைவர், நோர்லீலா இஸ்மாயில் தெரிவித்தார்.
இவை அனைத்து கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, அண்டை நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்றும், இது தொடர்பி மேலதிக விசாரணைகளை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.







