நண்பகல் நிலவரப்படி நாட்டில் வெள்ளத்தினால் வாழ்விடங்களைவிட்டு 2,626 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்:

இன்று நண்பகல் நிலவரப்படி மொத்தம் 2,626 பேர் வெள்ளம் காரணமாக தத்தமது வாழ்விடங்களைவிட்டு வெளியயேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திரெங்கானு, கிளந்தான் மற்றும் பகாங்கில் உள்ள 31 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய பேரிடர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திரெங்கானுவில் இன்று காலை வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,541 பேராக பதிவாகியிருந்த நிலையில், மதியம் அதன் எண்ணிக்கை தொடர்ந்து 2,105 பேராக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் திரெங்கானு, கிளந்தான் மற்றும் பகாங்கில் உள்ள 31 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிளந்தானின் பாசீர் பூத்தேவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 350 பேராகக் குறைந்துள்ளது, இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பஹாங்கின் பெக்கானில் உள்ள லெபுஹ்ராயா குவாந்தன்-சிகாமாட் (லெபுஹ்ராயா துன் ரசாக்) உட்பட வெள்ளத்தினால், சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் காரணமாக மொத்தம் 19 சாலைகள் மூடப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here