கோல சிலாங்கூர்:
அஸ்ஸாம் ஜாவாவில் உள்ள தாமான் முலியா அருகே நடந்த விபத்தில், கார் மற்றும் MPV வாகனம் மோதிய விபத்தில், கணவர் படுகாயமடைந்த நிலையில் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இவ்விபத்தில் நூர் இஸ்ஸாதி அஷிகின் இப்ராஹிம், 32, சம்பவ இடத்தில் இறந்தது உறுதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் அவரது கணவர், தர்மிஸி ருமந்துட், 37, படுகாயமடைந்தார்.
இந்நிலையில் MPV வாகனத்தில் பயணம் செய்த முகமட் சைபுல் ஷாரிர் முகமட் ரோஸ்டி, 41, மற்றும் அவரது ஐந்து வயது மகள் என அறியப்படும் இருவரில் முகமட் சைபுல் ஷாரிர் லேசான காயம் அடைந்தார், அவரது மகன் மீட்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
குறித்த விபத்து தொடர்பில் காலை 9.59 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும் , உடனே கோல சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) இயந்திரங்களுடன் ஏழு பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“ஆரம்பத் தகவல்களின்படி, ஜெரோமில் இருந்து கோல சிலாங்கூர் செல்லும் வழியில் தம்பதிகள் பயணித்த சென்ற புரோத்தோன் சாகா கார் எதிர் பாதையில் நுழைந்து தோயோத்தா எஸ்டிமா MPV வுடன் மோதியதாக நம்பப்படுகிறது.
மேலும் வழக்கு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.








