கோலாலம்பூர்:
சமீப காலமாக உலகில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் தற்போது கிரிப்டோ முதலீடுகளால் RM40 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டதாக மொத்தம் 49 போலீஸ் புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
இந்த இணைய முதலீட்டு மோசடி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடங்கியதாக நம்பப்படுகிறது என்று , புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.
இந்த மோசடியில் மொத்தம் RM40,723,358.84 இழப்புடன் சம்பந்தப்பட்ட 49 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று, அவர் கூறினார்.
“கடந்த ஒன்பது நாட்களில் மொத்தம் 49 ஆவணங்களில் 45அறிக்கைகள் பதிவாகியுள்ளன, அவற்றில் பேராக்கில் ஒருவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு RM10.4 மில்லியன் ஆகும்,” என்று அவர் கூறினார்.








