தப்பியோடிய கைதிகளில் 76 பேர் மீண்டும் பிடிபட்டனர், 53 பேர் இன்னும் தலைமறைவு

புத்ராஜெயா:

கடந்த வியாழன் அன்று பேராக்கில் உள்ள பீடோர் தற்காலிக குடிநுழைரவு தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் 18 சட்டவிரோதக் குடியேறிகள் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி, மொத்தம் 76 சட்டவிரோத குடியேறிகள் வெற்றிகரமாக பிடிபட்டுள்ளனர் என்று குடிநுழைவு துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

“பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பேராக்கின் தாபாவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஒரு பகிரப்பட்ட வீட்டில் பதுங்கியிருந்த மேலும் 18 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

“மீதமுள்ள 53 சந்தேக நபர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். குடிநுழைவுத் திணைக்களம் மற்றும் பல அரசு நிறுவனங்களின் குழுவுடன் இணைந்து போலீசாரால் இந்த முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் இன்று காலை நடந்த ஓர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here