கோலாலம்பூர்:
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து வரும் நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து, இன்று காலை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச டோல் சேவை இன்றும் தொடர்வதால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுங்கை பூலோவிலிருந்து தெற்கு ரவாங் வரையிலும், தெற்கு ரவாங் முதல் ரவாங் வரையிலும் வடக்கு நோக்கிய பாதையில் மெதுவான போக்குவரத்து காணப்படுவதுடன், சிலிம் ரிவரிலிருந்து சுங்காய் வரை நெரிசல் இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம், பிளஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தலைநகரை விட்டு வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.










