ஜோகூரில் சாலை வன்முறை; சிங்கப்பூரருக்கு RM5,500 அபராதம்

மூவார்:

டக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (NSE) வன்முறையில் ஈடுபட்ட சிங்கப்பூரர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM5,500 அபராதம் விதித்துள்ளது.

இன்று (பிப்ரவரி 14) மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன் ஆங்கிலத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், 45 வயதான சோ கியான் ஹுய், என்ற குற்றம் சாடடப்பட்ட ஆடவர், ஒரு காருக்கு RM2,500 மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றப்பத்திரிகையின்படி, சேதப்படுத்தப்பட்ட வாகனத்தின் 31 வயதான உரிமையாளருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, தோயோத்தா ஃபார்ச்சூனரின் பின்புற கண்ணாடியை சோஹ் சேதப்படுத்தினார்.

இச்சம்பவம் பிப் 10 அன்று பிற்பகல் 1.58 மணிக்கு மூவாரின் பாகோவில் உள்ள NSEயின் KM139.6 இல் நடந்தது.

இக் குற்றச் செயல்களைச் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் வருகிறது, இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here