வாங்க காற்று வாங்கப் போகலாம்!

பள்ளி விடுமுறை விட்டாச்சு. ஜாலியாக மலேசியாவில் உள்ள மனங்கவர் சுற்றுலாத் தலங்களை குடும்பத்தாரோடும் பிள்ளை களோடும் சுற்றிப் பார்க்கும் நேரமும் வந்தாச்சு.

இயற்கை வளங்கள், நீண்ட – விசாலமான கடற்கரைகள், கண்ணாடி போன்ற நீரைக் கொண்டிருக்கும் அழகிய கடல்கள், அவற்றில் வாழும் – துள்ளித் திரியும் உயிரினங்கள், பவளப் பாறைகள், முக்குளிப்பு, குளிர்ந்த மலைப் பிரதேசங்கள், வனப் பூங்காக்கள் போன்றவை மலேசியாவின் பொக்கிஷங்கள்.

அதேபோன்று கோலசிலாங் கூரில் உள்ள மின்மினிப் பூச்சி பூங்கா, பகாங்கில் இருக்கும் தேசிய வனப் பூங்கா, புலி – யானை சரணாலயங்கள், கோலாலம்பூரில் உள்ள வண்ணத்துப் பூச்சி பூங்கா, தேசிய தொல்பொருள் காட்சியகம் (மியூஸியம் நெகாரா), தைப்பிங்கில் உள்ள நைட் சஃபாரி (இரவு விலங்கியல் காட்சியகம்), உலு கிள்ளானில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா (ஸூ நெகாரா), ஜோகூர்பாரு விலங்கியல் பூங்கா போன்றவை பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டும் குதூகலத்தை ஏற்படுத்தும் இயற்கைப் பெட்டகங்கள்.

கேமரன்மலை, பிரேசர் மலை, பத்துமலை, கேஎல்சிசி பார்க், தைப்பிங் மெக்ஸ்வெல் மலை, ஜோகூரில் உள்ள டெசாரு பொழுதுபோக்கு மையம், லங்காவி தீவு, பங்கோர், பினாங்கில் உள்ள பத்து ஃபெரிங்கி, சிலாங்கூரில் உள்ள பூலாவ் கெத்தாம், பழத் தோட்டங்கள், கினபாலு மலை, சிப்பாடான் தீவு, பாக்கோ தேசியப் பூங்கா, சன்வே லகூன், லெகோ லேண்ட் சிறார் பொழுதுபோக்கு மையம், பெர்ஹெந்தியான் தீவு, தியோமான் தீவு, கெந்திங் சுங்கை வேர்ல்டு தீம் பார்க், எஸ்கேப் பினாங்கு, தி டோப் பினாங்கு தீம் பார்க், ஸ்கைடுரோபோலீஸ் உள்ளரங்கு தீம் பார்க், தம்புன் லேண்ட் வேர்ல்டு தீம் பார்க், மலாக்கா ஆஃபாமோசா நீர் தீம் பார்க், ஷா ஆலம் வெட் வேர்ல்டு தீம் பார்க், ஐ-சிட்டி பனிப்பொழிவு தீம் பார்க், கேஎல்சிசி மீன்கள் பூங்கா போன்ற மனமகிழ் மையங்கள் இதயங்களைக் குளிர்விக்கும்.

கோலாலம்பூர் பறவை பூங்கா, கோலாலம்பூர் சிறார் நூல் நிலையம், தேசிய நூலகம், கோலாலம்பூர் ரோயல் சிலாங்கூர் பியூட்டர், பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் மலாக்காவில் ஜோங்கர் வால்க், கடல் சார் மியூஸியம், மலாக்கா ஆறு, டக் டவர்ஸ், கிளேபாங் கடற்கரை, மேடான் சமுத்ரா கைவினை மையம், டத்தாரான் பாஹ்லவான் ஷாப்பிங் மால் போன்றவை நம் பிள்ளைகளை வெகுவாகக் கவரும்.

மலேசியாவின் நிர்வாக நகரம் புத்ராஜெயா, கிட்டத்தட்ட 3,000 வகையான கடல் உயிரினங்களையும் பவளப் பாறைகளையும் தனது மிகப்பெரிய சொத்தாகக் கொண்டிருக் கும் சிப்பாடான் தீவு, 9 தீவுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரெடாங் தீவு, செமினியில் உள்ள புரோகா பொழுதுபோக்கு மையம் (உதய சூரியனை கண்குளிரக் காணலாம்), இயற்கை சதுப்பு நிலப் பூங்காவாகத் திகழும் லங்காவி தீவில் உள்ள கிலிம் கார்ஸ்ட் ஜியோ ஃபோரஸ்ட் பூங்கா, ஓராங் ஊத்தான்களின் உறைவிடமான செமாங்கோ இயற்கை வனம், திரெங்கானுவில் கடலாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் கடற்கரை சரணாலயம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த இடங்கள் நம்முடைய இதயங்களைக் கிறங்க வைக்கும்.

செர்டாங்கில் உள்ள ஸோர்பிங் – பளிச்சென தெரியும் பிரமாண்ட பலூனுக்குள் சாகசம். பிரபலமான மனமகிழ் இடம், கண்ணாடி போன்று தெளிந்த நீரைக் கொண்டிருக்கும் சபா, போர்னியோவில் உள்ள செம்போர்னா ஆகியவை உங்களை மயக்கும் சுற்றுலாத் தலங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here