கோலாலம்பூர் :
வரும் திங்கட்கிழமை (மே 12) கொண்டாடப்படும் விசாகத் தினத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சேவை வழங்கப்படும் என்று பினாங்கு துறைமுக ஆணையமும் (SPPP) பினாங்கு துறைமுக நிறுவனமும் (PPSB) அறிவித்துள்ளன.
Pangkalan Sultan Abdul Halim-லிருந்து Pangkalan Raja Tun Uda செல்லுவதற்கான இருவழி படகுச் சேவைக்கு அன்றைய தினம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் டத்தோ ஜியோ சூன் ஹின் தெரிவித்தார்.
Pangkalan Sultan Abdul Halim-லிருந்து முதல் படகு சேவை காலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவடையும்.
அதேபோல், Pangkalan Raja Tun Uda-விலிருந்து முதல் படகு சேவை காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணிக்கு நிறைவடையும் என்று அவர் கூறினார்.
எனவே பொதுமக்கள் தங்கள் பயணத்தை படகு சேவைக்கான அட்டவணையைச் சரி பார்த்து முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



















