தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி மகள்கள் : கணவர் கைது

சிரம்பான், நீலாய் லெங்கெங்கில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மனைவி மற்றும் இரண்டு மகள்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 வயதில் தொழில்நுட்ப வல்லுநரை போலீசார் கைது செய்தனர்.

மூன்று சடலங்கள் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக நீலாய் மாவட்ட பொலிஸ் தலைவர்  அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.

நேற்று இரவு 9.25 மணியளவில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டதாக ஒரு நபரிடமிருந்து லெங்கெங் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

விசாரணையின் முடிவில் 34 வயதுடைய பெண்ணும், ஆறு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளும் வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணைக்கு உதவ தொழில்நுட்ப வல்லுநர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here