பினாங்கு மாநில பிகேஆரை நூருல் இஸா தொடர்ந்து வழிநடத்துவார்

 பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார், பிகேஆர் மாநிலத் தலைமையின் சமீபத்திய மாற்றத்தில் பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய மாநில தலைமைத்துவதற்கு மாற்றத்திற்கு பிறகு  பினாங்கு மாநிலத்தை அவர் தொடர்ந்து வழிநடத்துவார்.

பிகேஆர் பொதுச்செயலாளர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஒரு அறிக்கையில், பினாங்கில் நூருல் இஸ்ஸா தொடர்ந்து தலைமை தாங்குவார். துணைத் தலைவர் முகமட் அப்துல் ஹமிட் உதவி புரிவார்.

பெர்லிஸ் மற்றும் கெடாவில், அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதிகளான அமின் அஹ்மத் மற்றும் நூர் அஸ்ரினா சுரிப் ஆகியோர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில், பிகேஆர் துணைத் தலைவர் அமினுதீன் ஹாருன் நெகிரி செம்பிலானில் பிகேஆர் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார். அங்கு அவர் மந்திரி பெசார் பதவியையும் வகிக்கிறார். அவரது துணைத் தலைவர் ரஃபீ இப்ராஹிம் மலாக்காவை வழி நடத்துவார். சக பிகேஆர் துணைத் தலைவர் சாங் லிஹ் காங் பேராக் பிகேஆர் தலைவராகவும் பதவி வகிப்பார்.

பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்ற மத்திய தலைமைக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டது. பெர்லிஸ் மற்றும் கெடாவில் கட்சியின் வளர்ச்சியைக் கண்காணிக்க கவுன்சில் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில் அமினுதீன் மலாக்காவை கண்காணிப்பார் என்று சைஃபுதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here