வாடகை கார், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் அடுத்த மாதம் முதல் Socso பெறலாம் – லோக்

புத்ராஜெயா:

டுத்த மாதம் முதல், நாட்டில் மொத்தம் 35,000 வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் 18,000 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (Socso) கீழ் பயனடைவார்கள் என்றும், இது அரசாங்கத்தால் முழுமையாக செலுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அவர்களின் Socso சந்தாவில் 90 சதவீதம் நிதி அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின் மூலம் ஏற்கப்படும் என்றும், மீதமுள்ள 10 சதவீதத்தை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து அமைச்சகம் (MoT) செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

“வாடகைக் கார் ஓட்டுநர்கள், இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கு 90 சதவீதம் வரை Socso சந்தா செலுத்துவதற்காக நிதி அமைச்சகம் RM100 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது என்று கூறிய அவர், மீதமுள்ள 10 சதவீதத்தை ஓட்டுநர்களே செலுத்த வேண்டும். இருப்பினும் டாக்சி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, ஒரு வருடத்திற்கு 10 சதவீத பங்களிப்பை போக்குவரத்து அமைச்சு வழங்கும்,” என்று அவர் இன்று நடந்த போக்குவரத்து அமைச்சின் சுவா காசிஹ் மடானி நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் விபத்து ஏற்பட்டால் வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here