புதிய நாடாளுமன்றக் கூட்டம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை

இன்றைய நாடாளுமன்றக் கூட்டம், அனைத்து குடிமக்களின் நலனுக்காக நாட்டை மேம்படுத்த அனைத்து தரப்பினரிடையேயும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்புகிறார். முன்னதாக, பிரதமர் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் கூட்டத்தின் தொடக்கத்தில் கலந்து கொண்டார்.

சுல்தான் இப்ராஹிம் ஜனவரி 31 அன்று 17ஆவது மாமன்னராக பதவியேற்ற பிறகு அவர் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்தார். விழாவின் பல புகைப்படங்களையும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள நாட்காட்டியின் அடிப்படையில், இந்த நாடாளுமன்ற அமர்வு 19 நாட்களுக்கு நீடிக்கும். பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 முதல் மார்ச் 11  நான்கு நாட்கள்.வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரச உரை மீதான விவாதத்தில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொடர்புடைய அமைச்சகங்கள் முடிவடையும். மக்களவை அமர்வுகளுக்கு பின்னர் மசோதாக்கள் தாக்கல் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here