சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான்: மன்னிப்பு கேட்ட சிவகுமார்

பொது இடத்தில் சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான் மன்னிப்பு கேட்கிறேன் என நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகுமாரும் அவரது நண்பரும் பேசியுள்ளனர்.

அதில், நான் சால்வையை தூக்கி எறிந்த நபர் வேறு யாருமில்லை. நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி. 1971-ல் மன்னார்குடியில் ஒரு நாடகத்தை தலைமை தாங்க போயிருந்தேன். அப்போதுதான் இவரை சந்திந்தேன். 1974-ல் நடைபெற்ற எனது திருமணதிற்கு இவர் வந்திருக்கிறார். பின்பு இவரின் கல்யாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். அதுமட்டுமில்லை அவரின் மகன், பேரன் திருமணத்திற்கும் நான் சென்றுள்ளேன்.

பொது இடத்தில சால்வை அணிவிப்பது எனக்கு பிடிக்காது. ஆனாலும் பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டி விட்டது சர்ச்சையானது. அப்போதும் சிவகுமார் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here