சிப்பாங், டெங்கிலின் தாமான் பெர்மாத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத் தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 20) காலை 8.20 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நீர் சுமார் இரண்டு அடி ஆழத்தில் இருந்தது என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




















