5 பதக்கங்கள் வென்று ரிசாலினி – யோகிஷா சாதனை

கே. ஆர். மூர்த்தி

கூலிம், பிப். 29-

கெடா மாநில கராத்தே கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் யோகிஷா, ரிசாலினி ஆகிய இருவரும் தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்று மாநில கராத்தே கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மெர்சிங்  மாவட்ட கராத்தே கழகம், ஜோகூர் ஷோரின்- ரியு செய்புகான் கராத்தே கழகத்தின் ஆதரவோடு இவ்வாண்டுக்கான முதலாவது கராத்தே பொதுப்போட்டியை நடத்தியது.

இப்போட்டி ஜோகூர் மெர்சிங்கில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள பெர்மாத்தா மார்ஜன் மண்டபத்தில் நடைபெற்றது.

மெர்சிங் மாவட்ட கராத்தே கழகத்தின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான மாஸ்டர் லோகேன் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவர் வி.விக்ரம சூரியா தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் சிலாங்கூர், கோலாலம்பூர்,  கெடா, மலாக்கா, ஜோகூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து 180 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் கோஹி மாஸ்டர் எஸ். ஸ்டாலின், தியாகா தலைமையில் மாஸ்டர் விஜேய்டி, யோகிஷா, கே. ரிசாலினி ஆகிய இரு மாணவிகளை இப்போட்டியில் பங்கேற்க அழைத்துச் சென்றார்.

இப்போட்டியில் 16 வயதிற்குக் கீழ், 16 வயதிற்கு மேல் ஆகிய இரு பிரிவுகளில் இம்மாணவிகள் இருவரும் கலந்துகொண்டனர்.

அவர்களில் மாணவி  டி. யோகிஷா 16 வயதிற்கு கீழ் தனிநபர் காத்தா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் 16 வயதிற்கு கீழ் தனிநபர் குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றார்.

ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்த இவர்கள் இருவரும் கடந்தாண்டு நவம்பர் மாதம் கராத்தே கழகத்தினால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட ரோட் டு கோல்டு எனப்படும் தங்கத்தை நோக்கி பயிற்சித் திட்டத்தில் பங்குபெற்று வரும் மாணவிகளாவர்கள்.

கெடா மாநில கராத்தே கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவிகள் இருவரும் கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கோஹி மாஸ்டர் எஸ். ஸ்டாலின், தலைமை பயிற்றுநர் மாஸ்டர் ப. தியாகராஜன், மாஸ்டர் விஜேய் ஆகியோருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here