அனைத்து அரசு அலுவலகங்களுடன் பாகன் டத்தோவில் உதயமாகும் புதிய நகர்- துணைப்பிரதமர்

பாகன் டத்தோ:

மாவட்டத்தின் திறனை விரிவுபடுத்துவதற்காக இங்குள்ள பண்டார் பாரு பாகன் டத்தோவில் புதிய நகரத்தை உருவாக்க அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்துகிறது.

இந்தத் திட்டம் முடிந்ததும், மாவட்ட காவல்துறை தலைமையகம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக அலுவலகங்களும் புதிய நகரத்திற்கு மாற்றப்படும் என்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

” சுமார் 385 ஏக்கர் (155 ஹெக்டேர்) இடம் இந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்படுகிறது, என்றும் இந்த நிலம் கையகப்படுத்துதலுக்கான ஒதுக்கீடு, பேராக் அரசாங்கத்தின் கீழ் உள்ள துறைகள் உட்பட அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் ஏஜென்சிகள் மற்றும் துறைகளின் ஒதுக்கீடுடன் மாவட்ட அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்படும்,” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here