கோலாலம்பூர்:
13 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில், மலேசிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அதனால் விரைவில் மலேசியாவில் சமூக ஊடக நிறுவனங்கள், eKYC எனப்படும் மின்னணு அடையாளச் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறை நடப்புக்கு வந்தால் இளம் பிள்ளைகள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என்றும், அவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மாதம் இதுகுறித்து சமூக ஊடக நிறுவனங்களிடம் பேசியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தப் புதிய கட்டமைப்பு விதிமுறை எப்போது நடப்புக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.





















