அம்பானி மகன் திருமணம்: குஜராத் சென்ற ரஜினிகாந்த் குடும்பத்தினர்

‘ரிலையன்ஸ்’ நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீட்டா தம்பதிகளின் இளையமகன் ஆனந்த்அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள்ஷாருக்கான்,சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். இன்று 3ஆவது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு  சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here