கடும் வெப்பம்; சபாவில் செயற்கை மழையை உடனடியாக செயற்படுத்துங்கள்

கோத்தா கினாபாலு:

கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் சபா அணையில் நீர் இருப்பு கடுமையாக குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பதால், செயற்கை மழை அல்லது மேக விதைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

வறண்ட காலநிலை இயற்கை நீர் விநியோகத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளது, மேலும் மழை இல்லாத நிலையில், மாநிலத்தின் நீர் இருப்பு மூன்று மாதங்களில் வறண்டுவிடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது என்று, பார்ட்டி ககாசன் ரக்யாட்டின் சபா மாநில துணைத் தலைவர் டத்தோ மசியுங் பனா கூறினார்.

“சபாவில் செயற்கை மழையை பொழிவிக்க மத்திய அரசு (உடனடியாக) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று குவாமுட் சட்டமன்ற உறுப்பினருமான அவர், இன்று (மார்ச் 4) கூறினார்.

இது தொடர்பில் மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திடம் (நட்மா) தாமதமின்றி அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, மாநிலத்தின் நீர்த்தேக்கங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீரை வழங்க முடியும் என்று சபா நீர் துறை அறிக்கை அளித்துள்ளது மிகவும் கடுமையாக அனைவரும் கவனிக்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு வெப்பக் காலநிலை தொடங்கியதில் இருந்து சில பகுதிகளில் ஆற்று நீர் மட்டங்களும் கணிசமாகக் குறைந்துள்ளதாக மசியங் குறிப்பிட்டார்.

“இது பயிர்கள் மற்றும் கால்நடைகளை அழித்துவிட்டது, மேலும் கிராமப்புற மக்களுக்கு நீர் விநியோகத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here