‘தக் லைப்’ – செர்பியாவில் முகாமிட்டுள்ள மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் 36 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘தக் லைப்’ என்ற புதிய ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல்

ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது.

இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, மணிரத்னம் செர்பியாவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் நடிகர் கமல் தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்துகிறார். பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன. மணிரத்னம்-கமல் லட்சிய படமான ‘தக் லைப்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here