சொகுசுமாடிக் குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு; ஸ்ரீ பெட்டாலிங்கில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

கோலாலம்பூர்:

ஶ்ரீ பெட்டாலிங்கிலுள்ள பினாங்கிள் சொகுசுமாடிக் குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படும் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

குறித்த சம்பவம் தொடர்பில், இன்று சுமார் 2.30 மணியளவில் ஶ்ரீ பெட்டாலிங் காவல் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, அம்மாவட்ட காவல்துறை தலைவர் கூறினார்.

இவ்வழக்கு தொடர்பில் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here