படப்பிடிப்பு தளத்தில் chef ஆக மாறிய நடிகர் அஜித்

அறுவை சிகிச்சைக்குப் பின், பைக்கில் ஜாலியாக பயணம் கிளம்பியிருக்கிறார் நடிகர் அஜித். தன்னுடன் பைக் ரைட் வந்த குழுவினர்களுக்கு இரவு உணவாக chef ஆக மாறி நடிகர் அஜித் பிரியாணி சமைத்து பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய அறுவை சிகிச்சைக்கு பின்னர் படப்பிடிப்பு, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், தனக்குப் பிடித்தமான பைக் ரைடு என மீண்டும் இயல்புக்குத் திரும்பியுள்ளார் நடிகர் அஜித். இதில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், மத்திய பிரதேசத்தில் தன் குழுவினருடன் பைக் ரைடு கிளம்பியுள்ளார் அஜித்.

இந்நிலையில், இரவு நேரத்தில் தன்னுடன் பயணித்தவர்களுக்கு chef ஆக மாறி தனது ஸ்பெஷல் பிரியாணி ரெசிப்பியை செய்து பரிமாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்புத் தளங்களில் நடிகர் அஜித் சமைத்து தரும் பிரியாணியின் சுவையை சக நடிகர்கள் அவ்வப்போது பேட்டிகளில் சொல்லி வரும் நிலையில், தன்னுடன் பயணிக்கும் சக பைக் ரைடர்களுக்கும் பிரியாணி சமைத்து பரிமாறி அசத்தி இருக்கிறார் அஜித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here