தானா மேரா:
தானா மேரா தொழில்துறை பகுதியில் உள்ள அவரது தொழிற்சாலையில் இரும்பு கம்பி கதவு விழுந்ததில் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 70 வயதான நபர், தொழிற்சாலையின் இரண்டாவது கேட்டை சோதனை செய்துவிட்டு, அதை மூடுவதற்காக கேட்டை தள்ளியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வேலியின் சக்கரம் பாதையை விட்டு விலகியதால், கதவு அவருக்கு மேல் கவிழ்ந்ததில் தொழிற்சாலை உரிமையாளர் உடல் நசுங்கி, உயிரிழந்தார் என்று, தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஹக்கி ஹஸ்புல்லா கூறினார்.
இவ்வழக்கில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், போலீசார் இதனை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.





















