குவாந்தான்:
இங்குள்ள இந்தரபுரா வேளாண்மைத் துறை பகுதியில் உள்ள சுமார் 30 ஹெக்டேயர் காடு கடும் வெயில் காரணமாக நேற்று (மார்ச் 29) தீப்பிடித்தது.
உடனே காலை 9.08 மணிக்கு தாமான் தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள், மாரான் மற்றும் பெரமு தீயணைப்பு நிலையங்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சுமார் 30 ஹெக்டேயர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளதுடன், இதுவரை 20 ஹெக்டேயர் தீ அணைக்கப்பட்டுள்ளது” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், நேற்றுரவு 10 மணி நிலவரப்படி, தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க மீதமுள்ள 10 ஹெக்டேர் பகுதியில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் சொன்னார்.