மலேசியாவில் தினசரி 3,000க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர்:

மலேசியா ஒவ்வொரு நாளும் 3,000க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் கூறினார்.

நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் உடல் ரீதியானவை மட்டுமல்ல, சைபர் தாக்குதல் வடிவத்திலும் வருகின்றன என்று அவர் விளக்கினார்.

“சைபர் தாக்குதல் மூலம் அரசு அமைப்புக்களை ஹேக் செய்ய முடிந்தால், அவர்களால் உளவு பார்க்கவும், கேட்கவும் மற்றும் எங்கள் இயக்கங்களை கண்காணிக்கவும் முடியும், குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட இரகசியங்கள் என்பவற்றை கூறலாம் என்று அவர் சொன்னார்.

இந்த தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் பல்வேறு தரப்பிலிருந்து வருகின்றன. அவர்கள் யார்? அதைப் பற்றி நாம் விரிவாகக் கூற வேண்டியதில்லை.

“எவ்வாறாயினும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும்,தடுக்கவும் எங்கள் ஆயுதப் படை வீரர்கள் 24 மணி நேரமும்,வாரத்தில் ஏழு நாட்களும் விடுமுறையின்றி பணியாற்றுகிறார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் ஒரு இஸ்ரேலிய நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உளவாளி என்று சந்தேகப்படுவது என்பன தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here