312.7 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது

ஷா ஆலம்: இரண்டு அழகுசாதன தொழில்முனைவோர் மற்றும் ஒரு சுற்றுலா பேருந்து மேலாளர் என மூவர் 312.7 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சுமார் 1.6 மில்லியன் போதைப் பித்தர்கள் பயன்படுத்தலாம். மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் டத்தோ காவ் கோக் சின், 10.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன்  ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்த பின்னர், ஒரு பேருந்து ஓட்டுநருடன் மூவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஃபோர்டு ரேஞ்சர், டொயோட்டா விஷ், ஹோண்டா சிவிக் மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட ஐந்து வாகனங்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசியாவின் வடக்கு எல்லையில் உள்ள அண்டை நாடு வழியாக போதைப் பொருட்களைக் கடத்துவதும், ஒரு மாநிலத்தில் அதனை விநியோகம் செய்வதும்தான் அவர்களின் செயல்பாடாகும். போலீஸ்காரர்கள் பின்தொடர்கிறார்களா என்று சோதிப்பார்கள். இல்லையென்றால், அவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்குக்குச் செல்வார்கள் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 40 வயதான சுற்றுலாப் பேருந்து மேலாளர், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்த அனுபவத்தைப் பயன்படுத்தி போதைப்பொருளைக் கடத்தியதற்கான வாய்ப்பை காவ் நிராகரிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here