ஈப்போ சந்தையில் சட்டவிரோதமாக கடன் வழங்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்

ஈப்போ ரமலான் சந்தையில் சட்டவிரோதமாக கடன் கொடுத்ததற்காகவும், ஆன்லைன் சூதாட்டத்திற்காகவும் வணிக அட்டைகளை வழங்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். சனிக்கிழமை (மார்ச் 30) ​​ஈப்போ ஸ்டேடியம் பஜாரில் வணிகர் ஒருவர் பதிவு செய்த காணொளி வைரலாக பரவி வருவதாக பேராக் காவல்துறைத் தலைவர்  டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக மூன்று பேரும் கார்டுகளை விநியோகம் செய்து வருவதாக அவர் கூறினார். Oppa Zuzu Kitchen  என்ற பெயரில் வணிகர் ஒருவர் ஒரு நிமிட காணொளியை பதிவு செய்துள்ளார். காணொளியில் ஒரு நபர் பஜாரில் உள்ள அனைத்து கடைகளிலும் அட்டைகளை விநியோகிப்பதைக் காட்டுகிறது.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக  முகமது யுஸ்ரி தெரிவித்தார். சம்பவம் குறித்து காவல்துறை புகார் இன்னும் யாராலும் செய்யப்படவில்லை. ஆனால் காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here