கிள்ளான் ஆறு நாட்டு வேளாளர் சங்கத்தின் (AVS) தலைவராக டத்தோ மனோகரன் கிருஷ்ணசாமி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொண்டார். அண்மையில் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 45ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் @ ஷெல் பாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
ஆனால் வாக்கெடுப்பிற்கு பின்னர் டத்தோ மனோகரன் கிருஷ்ணசாமியின் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சங்க உறுப்ப்பினர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்ததோடு வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து சங்க வளர்ச்சி குறித்தும் சங்கத்திற்காக கட்டடம் வாங்க வேண்டும் என்று கலந்துரையாடியபோது டத்தோ விஜயசேகரன் 1 லட்ச ரிங்கிட் நன்கொடையாக வழங்குவதோடு தான் கட்டடக்குழுத் தலைவராக இருந்து கட்டத்திற்கான இடத்தை கொள்முதல் செய்யலாம் என்றார். அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டத்தோ டாக்டர் சண்முக நாதன் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குவதாக வாக்குறுதியளித்தார். மேலும் சங்கத்தின் புரவலரும் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ ஆலயத்தின் தலைவருமான சங்கபூஷண் சித.ஆனந்த கிருஷ்ணன் 10 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குவதாகத் கூறினார்.
ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குவதாகத் தெரிவித்தனர். நமது அடுத்த தலைமுறையினருக்கு நம்முடைய அடையாளமாக ஒரு கட்டடத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டலாம் என்று பலத்த கரக்கோஷத்திற்கிடையே நிறைவேற்றப்பட்டது.