பேரரசர் தம்பதியினரின் பெயரை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ஷாரித் ஷோபியா ஆகியோரது பெயர்களை சமூக ஊடகங்களில் தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரரசர் அறிவித்துள்ளார்.

தற்போது உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சாதாரணமாகவே சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். அது தவிர ஒருவரின் அடையாளம் மற்றும் பெயரை அவரின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே அவ்வாறு செய்பவர்களின் தகவலை உடனடியாக தெரிவிக்கும்படி, மேன்மை தங்கிய மாமன்னர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

பேரரசரின் பெயரில் வெளியான ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கு தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக அவர் இந்த தகவலை அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here