12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை – மீட்கும் பணி தீவிரம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வருகிறது.

15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விசாரணையில் ஈடுப்பட்டிருக்கும் போலீசார் கூறுகையில், குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாகவும் இந்த கிணறு குழந்தையின் தந்தையின் சொந்த காணியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவை அதிகாரிகள் உள்ளனர். வீடியோ மூலம் குழந்தையை பார்த்த போது, குழந்தையின் கால்கள் அசைந்துள்ளன. எனவே குழந்தைக்கு ஆக்ஜிஜன் வழங்குவதற்காக கிணற்றுக்குள் குழாய்கள் செருகப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here