கோத்தா கினாபாலு:
தீபகற்ப மலேசியா, சரவாக் மற்றும் லாபுவானில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சபா மாநில மாணவர்கள், இப்போது சபா அரசாங்கத்தின் RM600 விமான கட்டண மானியத்திற்கு பதிவு செய்யலாம்.
சபா அறக்கட்டளை, சபா இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும் சபா மாநில அரசின் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது என்று, இன்று பேஸ்புக்கில் மாநில துணைச் செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















