காரில் 9,430 வெள்ளி மதிப்புள்ள போதை மருந்து கடத்த முயன்ற நபர் கைது

தும்பாட், நவம்பர் 5 :

வகாஃப் பாருவில் நேற்று போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது போலீஸ் ரோந்துக்காரை மோத முயன்ற 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரது காரில் கடத்தப்பட்ட 9,430 வெள்ளி மதிப்புள்ள போதை மாத்திரைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் கடத்துபவர் என்று சந்தேகிக்கப்படும் அந்த தொழிலாளி, சம்பவம் நடந்தபோது, ​​தும்பாட்டில் இருந்து வகாப் பாருவுக்குச் சென்று கொண்டிருந்தார்.

கிளந்தான் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் இதுபற்றிக் கூறுகையில், நேற்று மாலை 5.50 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவரின் காரின் டயரில் ஒன்றைச் சுட்டதன் பிறகு போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறினார்.

“போதைப்பொருள் புலனாய்வு திணைக்களத்தின் போலீஸ் குழுவும் இணைந்து ஒரு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேக நபரின் கார் அந்த பகுதியைக் கடந்தது.

“வகாஃப் பாரு தினசரி சந்தை அருகே அவரது காரை நிறுத்துமாறு சந்தேக நபரை போலீசார் அறிவுறுத்தினர், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

“அதற்குப் பதிலாக, அவர் தனது காரைப் பின்னோக்கிச் செலுத்திச் சென்று, காவல்துறையின் ரோந்துக்காரை மோத முயன்றார், அப்போது போலீஸார் அவரின் கார் டயர்களில் ஒன்றைச் சுட்டனர், அதன் பின்னரே சந்தேக நபர் தனது வாகனத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டார் ,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தொடர்ந்து முஹமட் ஜாக்கி கூறுகையில், அந்த நபரிடமும் காருக்குள்ளும் சோதனை நடத்தியதில் 943 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

“போதைப்பொருள் சோதனையில் தும்பாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் நேர்மறையான பதிலை பெற்றுள்ளார் , மேலும் எதிராக ஐந்து முந்தைய குற்றப்பதிவுகளும் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

போலீஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here